பொது

பத்து ஃபெரிங்கியில் குதிரை சவாரிக்குத் தடை- பினாங்கு அரசாங்கம்

30/07/2024 07:35 PM

பத்து ஃபெரிங்கி, 30 ஜூலை (பெர்னாமா) --  இவ்வாண்டு செப்டம்பர் முதலாம் தேதி தொடங்கி, பினாங்கு, பத்து ஃபெரிங்கி கடற்கரையில் அனைத்து குதிரை சவாரிகளையும் தடை செய்ய, பினாங்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குதிரை சவாரி நடவடிக்கைகளின் மூலம், அப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து பல புகார்கள் தங்கள் தரப்பு பெற்றதைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக, பினாங்கு ஆட்சி குழு உறுப்பினர் ஜேசன் ஹங் மூய் லெ கூறினார்.

''விலங்குகளின் நலன் உட்பட இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானதா போன்ற கட்டமைப்புகளை நிர்மாணிப்பது போன்ற பிற காரணங்களையும் பரிசீலிக்க வேண்டும்'', என்றார் அவர்.

இது போன்ற புகார்கள் முன்னதாகவே மாநில அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டதாகவும், அதற்கான முடிவுகள் ஆதரிக்கப்பட்டதாகவும், தஞ்சோங் புங்கா சட்டமன்ற உறுப்பினருமான ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்தார். 

இதனிடையே, பத்து ஃபெரிங்கி கடற்கரையில் குதிரைகளின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ள நிலையில், பல குதிரைகள் நோய்வாய் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)