பொது

சோதனை நடவடிக்கையில் அந்நிய நாட்டினர் செலுத்திய வாகனங்கள் பறிமுதல்

30/07/2024 07:50 PM

புத்ராஜெயா, 30 ஜூலை (பெர்னாமா) -- இன்று புத்ராஜெயாவில் PeWA எனும் சோதனை நடவடிக்கையில் அந்நிய நாட்டினர் செலுத்திய 72 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு காரை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே) பறிமுதல் செய்தது.

புத்ராஜெயா அமைப்பு PPj உடன் இணைந்து PeWA பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 228 நோட்டிஸ்களை வெளியிட்டதாக ஜே.பி.ஜேவின் இயக்குநர் ஏடி ரம்லி தெரிவித்தார்.

அந்நிய நாட்டினருக்கு 117 நோட்டீஸ்களும், வாகன உரிமையாளர்களுக்கு 111 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான மோட்டார் வாகன உரிமம், காப்பீடு இல்லாதது உட்பட பல குற்றங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

சோதனையிடப்பட்ட பெரும்பாலான அந்நிய நாட்டினர்கள் மலேசியாவில் பணிப்புரிவதற்கான ஆவணங்களை  வைத்திருந்ததாகவும், புத்ராஜெயா வட்டாரத்தில் வேலை செய்வதாகவும் ஏடி ரம்லி கூறினார். 

ஆனால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் அவர்களிடம் இல்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)