பொது

பள்ளிகளுக்கு நன்கொடை; நடப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றும் அமைச்சரவையின் முடிவிற்கு மதிப்பளிப்பீர்

30/07/2024 06:03 PM

சிரம்பான், 30 ஜூலை (பெர்னாமா) --  பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கும் தற்போதுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் எனும் அமைச்சரவையின் முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கேட்டுக் கொண்டார்.

பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான வழிகாட்டுதல் தொடர்பாக அரசாங்கம் கொண்டிருக்கும் தெளிவை, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்முடிவு புலப்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

''அமைச்சரவையின் முடிவே போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இனியும் இது குறித்து எவ்வித பிரச்சனையும் எழாது என்றும் நம்புகிறேன். நமது நிலைப்பாட்டில் நாம் உறுதியுடன் இருப்போம்'', என்றார் அவர்.

இன்று, துவாங்கு மூரிஸ் ஆறாம் படிவ கல்லூரியின் அறிமுக விழாவிற்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பள்ளிக்கூடங்களில் நன்கொடைகளை விநியோகிப்பதற்கு நடப்பில் இருக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக, முன்னதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)