உலகம்

நிக்கோலஸ் வெற்றி அறிவிப்பை எதிர்த்து வெனிசுலாவில் வெடிக்கும் போராட்டங்கள் 

30/07/2024 06:27 PM

கராகஸ், 30 ஜூலை (பெர்னாமா) -- தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

மடுரோ 51.2 விழுக்காடு வாக்குகளும், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் 44.2 விழுக்காடு வாக்குகளும் பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து மடுரோவின் ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டிவரும் நிலையில், இத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.

அதிபர் தேர்தலின் வெற்றியை மடுரோ சட்டவிரோதமாக கைபற்றியிருப்பதாக கூறி,  ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. 

பொது சொத்துகள் சேதமடைந்துள்ள நிலையில், சாலைகளில் சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)