விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி; அடுத்த சுற்றுக்கு தேர்வாகினார்  கோ ஜின் வெய்

30/07/2024 06:38 PM

பாரிஸ், 30 ஜூலை (பெர்னாமா) -- 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பூப்பந்து விளையாட்டில், தேசிய மகளிர் ஒன்றையர் பூப்பந்து விளையாட்டாளர் கோ ஜின் வெய் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளார்.

நேற்றிரவு, தென்னாப்பிரிக்காவின் JOHANITA SCHOLTZ-உடன் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், உலகின் 17 தரவரிசையில் உள்ள கோ ஜின் வெய் வெற்றி பெற்றார்.

முதல் செட்டில், சற்று கடுமையான போட்டியை எதிர்நோக்கினாலும், 23-21 என்ற புள்ளிகளில் ஜின் வெய் வெற்றி பெற்றார்.

இருப்பினும் இரண்டாம் சுற்றில்,  21-11 என்ற புள்ளிகளில் எளிதான வெற்றியை பதிவு செய்து, அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பினாங்கு மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ஜின் வெய், புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் தென் கொரியாவுடன் விளையாடவுள்ளார்.

இதில் வெற்றி பெற்றால், அவர் சிறந்த 16 சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்படுவார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)