விளையாட்டு

ஒலிம்பிக்; தனிநபர் பிரிவில் நடால் தோல்வி

30/07/2024 06:44 PM

பாரிஸ், 30 ஜூலை (பெர்னாமா) -- ஒலிம்பிக் போட்டியில் தனது பதக்கங்களை அதிகரிக்கும் முயற்சியில் டென்னிஸ் நட்சத்திர ஆட்டக்காரர் ரஃபேல் நடால் தோல்வி கண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நடால் தோல்வி அடைந்தாலும் இரட்டையர் பிரிவில் அவர் கார்லஸ் அல்காராசுடன் கை கோர்த்துள்ளார்.

செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுடன் நடால் விளையாடினார்.

இவ்வாட்டத்தில், 6-1, 6-4 என்ற புள்ளிகளில் 38 வயதான நடால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதுவரை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லாத ஜோகோவிச், அதனை நெருங்கியுள்ளார்.

மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி அல்லது இத்தாலியின் விளையாட்டாளருடன்  ஜோகோவிச் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)