பொது

பாதுகாப்பான இணைய பயன்பாட்டின் புதிய கட்டமைப்பு; முதலீடுகளைக் குறைக்காது

31/07/2024 05:03 PM

சிங்கப்பூர், 31 ஜூலை (பெர்னாமா) --  பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு விதிக்கப்படும் புதிய கட்டமைப்பு, நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளைக் குறைக்காது என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இது தெளிவான கட்டமைப்பை வழங்குவதால், அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் புதிய விதிமுறைகளால் முதலீட்டாளர்கள் ஊக்கமடைவார்கள் என்று அவர் விளக்கினார்.

''இந்தக் கட்டுப்பாடுகள் (புதிய கட்டமைப்பு) உள்ளன என்பதை அறிந்தால் ஒழுங்குமுறை மிகவும் தெளிவாக இருக்கும். இது மேலும் முதலீடுகளைத் தூண்டக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்றார் அவர்.

சிங்கப்பூருக்கு மேற்கொண்ட மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை முடித்து கொண்டு, இன்று பெர்னாவுக்கு வழங்கிய நேர்காணலில் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

இணைய பகடிவதைக் காரணமாக சில சமூக ஊடக தளங்களைத் தடை செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தாலும், கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்குச் சமூக ஊடக நடத்துடனர்களுடன் இணைந்து செயல்படுவதன் வழி நடுநிலையை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் மோசடி, சிறுவர் பாலியல் துன்புருத்தலுக்கான பொருட்கள் மற்றும் இணைய பகடிவதை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், சிறப்பு உரிமத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக ஃபஹ்மி விளக்கினார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)