விளையாட்டு

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்; செயின்ட் லூசியாவுக்கு முதல் தங்கம்

04/08/2024 07:42 PM

பாரிஸ், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் செயின்ட் லுசியாவின் ஜுலியன் அல்ஃப்ரெட் வெற்றி பெற்று தமது நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

10.72 வினாடிகளில் உலக வெற்றியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ஷா'கெரி ரிச்சர்ட்சன்னை தோற்கடித்து 23 வயதுடைய அல்ஃப்ரெட் அதிரடி படைத்துள்ளார்.

போட்டியின் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்து வந்த அல்ஃப்ரெட் முதல் இடத்தை பிடித்த நிலையில், ரிச்சர்ட்சன் 10.87 வினாடிகளில் வெள்ளி பதக்கத்தையும் மற்றோர் அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனையான Melissa Jefferson 10.92 வினாடிகளில் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

1996-ஆம் ஆண்டு கெயில் டெவெர்ஸ்க்குப் பிறகு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறும் முதல் அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனையாக Richardson விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், Alfred-இன் வேகத்திற்கு ஈடுகொடுக்கத் தவறியதால் டெக்சசை சேர்ந்த அந்த ஓட்டப்பந்தய வீராங்கனையின் கனவு கலைந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]