பொது

1,596 குறு கூட்டுறவு கழகங்கள் செயல்பாட்டில் இல்லை

31/07/2024 05:58 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) -- பதிமூன்றாயிரத்து முன்னூற்று நான்கு குறு கூட்டுறவு கழகங்களில் ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று ஆறு செயல்படாமல் இருப்பதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் மூலம் குறு கூட்டுறவு கழகங்களின் திறனை மேம்படுத்த பல முயற்சிகளையும் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு உதவ அமைச்சு உறுதி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

''2021ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை பதினாங்கு லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் நான்காயிரத்து ஐம்பத்து ஒன்று கூட்டுறவுகளை உட்படுத்தி கூட்டுறவு கணக்கு வலுப்படுத்தும் திட்டத்தின் மூலம் குறு கூட்டுறவுகளுக்குக் குறிப்பிட்ட பதிவு நிர்வகிப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்'', என்றார் அவர்.

இன்று மேலவையில் செயல்படாத குறு கூட்டுறவு கழகங்கள் மற்றும் செயல்பாட்டில் சிரமத்தை எதிர்நோக்கும் குறு கூட்டுறவு கழகங்களின் மீட்சிக்கு உதவும் முயற்சிகள் தொடர்பில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் ஆய்வு குறித்து செனட்டர் டத்தோ லிம் பெய் ஹென் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ரமணன் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)