உலகம்

வேலைவாய்ப்பு தொடர்பான ஆர்ப்பாட்டம், பிரபலமான இஸ்லாமிய கட்சிக்கு வங்காளதேசம் தடை

31/07/2024 08:24 PM

டாக்கா, 31 ஜூலை (பெர்னாமா) -- அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது 150 பேரை பலியாக்கிய வன்முறைக்கு காரணமான பிரபல இஸ்லாமிய கட்சி மற்றும் அதன் மாணவர் பிரிவை, வங்காளதேசம் தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நடவடிக்கை, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது என்று ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சி, சாடியுள்ளது.

அந்த இஸ்லாமிய கட்சியும் பிரதான எதிர்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சியும், அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவை விதிக்க காரணம் என்று பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி, அந்த தடை அமலுக்கு வரும் என்று சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை