பொது

நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது

31/07/2024 08:24 PM

புத்ராஜெயா, 31 ஜூலை (பெர்னாமா) -- நாட்டில் 2023ஆம் ஆண்டு பதிவான 3 கோடியே 34 லட்சம் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி விகிதம் 1.9 ஆக அதிகரித்து இவ்வாண்டு 3 கோடியே 41 லட்சம் ஆக பதிவாகியுள்ளது.

மலேசியப் புள்ளியியல் துறை வெளியிட்ட 2024ஆம் ஆண்டு மலேசிய தற்போதைய மக்கள் தொகையின் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உள்நாட்டினர் எண்ணிக்கை மூன்று கோடியே 4 லட்சமாக இருந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் மூன்று கோடியே 7 லட்சமாக அதிகரித்திருக்கின்றது.

2023ஆம் ஆண்டு பதிவான 17.1 விழுக்காடு மலேசியர்கள் அல்லாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டு 13.6 விழுக்காடு பதிவாகியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)