பொது

'BABY SYIFA' மரணத்திற்கு கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம்தான் காரணம்

31/07/2024 06:08 PM

சிரம்பான், 31 ஜூலை (பெர்னாமா) -- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் உள்ள தொட்டிலில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நூர் ரனியா அசிஃபா யுசேரி அல்லது 'Baby Syifa' மரணத்திற்கு அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம்தான் காரணம் என்று சிரம்பான் மரண விசாரணை நீதிமன்றம் தீர்மானித்தது.

அத்தீர்ப்பை வாசித்த மரண விசாரணை நீதிபதி, டத்தின் சுரித்தா புடின், பதினைந்து மாத குழந்தையின் மரணம் ஒரு விபத்தல்ல, பராமரிப்பாளர் விட்டுச் சென்றதால் அக்குழந்தை தொட்டிலில் தொங்கி இறந்ததாக தெரிவித்தார்.

Baby Syifa-வின் மரணத்திற்கான கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம் என்று தமது தீர்ப்பை வாசித்தபோது டத்தின் சுரித்தா கூறினார்.

தொட்டில் துணி முனையின் ஓரத்தில் அக்குழந்தையின் கழுத்துப் பகுதி சிக்கியபோது, அவரின் எடை ஏற்றவாறு அந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இறந்தவரின் மரணம் ஒரு விபத்தோ அல்லது தற்செயலாக நிகழ்ந்த விபரீதம் அல்ல என்பதை உறுதிசெய்ய சாட்சிகளின் வாக்குமூலமும் நம்பக்கூடிய தன்மையும் சமநிலையில் இருந்தது, தமக்கு இத்தீர்ப்பில் திருப்தியை அளித்ததாகவும் சுரித்தா தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய இந்த விசாரணையில் மொத்தம் இருபத்து எட்டு  சாட்சிகள் அழைக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)