பொது

HEAL திட்டம் மூலம் 317 தற்கொலை சம்பவங்களுக்கு தீர்வு

31/07/2024 08:12 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) -- 2022ஆம் ஆண்டில் 15555 என்ற மனநலப் பிரச்சனை உதவி சேவை திட்டம், HEAL தொடங்கப்பட்டது முதல் கடந்த ஜூலை 20ஆம் தேதி வரை இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் 317 தற்கொலை சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மலேசிய தற்கொலை விழிப்புணர்வு குரல் (MySAVE) திட்டமும் பயனுள்ள ஊடக எழுத்து மூலம் தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.

''சிறந்த ஊடக எழுத்துக்கள் மனநல நோயாளிகளுக்கு கருத்து கிடைக்க உதவுகின்றன. மேலும், நாங்களும் மனநலன் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள கேபிஎம் மற்றும் கேபிடி உடன் ஒத்துழைப்பு மேற்கொள்கிறோம்,'' என்றார் அவர்.

இன்று மேலவையில், கேள்வி பதில் நேரத்தின்போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

பள்ளி மற்றும் உயர்க்கல்விக் கழக மாணவர்கள் மத்தியில் மனநலன் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து செனட்டர டத்தோ நெல்சன் அஙாங் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு லுகானிஸ்மான அப்பதிலை வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)