உலகம்

வடமேற்கு பாகிஸ்தானில் கனமழை; 14 பேர் பலி

31/07/2024 07:34 PM

கோஹாட், 31 ஜூலை (பெர்னாமா) --  வடமேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது பதினாங்கு பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் பதினொரு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், கோஹாட் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டி அடித்தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அக்குடும்பத்தினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட அவ்வீட்டின் அடித்தளம் முற்றிலும் வெள்ளநீரால் சூழ்ந்த வேளையில், மீட்புக் குழுவினர் நீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதில் பத்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே, பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழையினால் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

மழையினால் அடுத்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், பாகிஸ்தானில் உள்ள பல நகரங்கள், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை வெள்ளத்துடன் போராடி வருகின்றன.

இச்சூழ்நிலைக்கு மோசமான அரசாங்கத் திட்டமிடலே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாகாணத்தின், கோஹாட் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டி அடித்தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அக்குடும்பத்தினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட அவ்வீட்டின் அடித்தளம் முற்றிலும் வெள்ளநீரால் சூழ்ந்த வேளையில், மீட்புக் குழுவினர் நீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதில், பத்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே, பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழையினால் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

மழையினால் அடுத்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், பாகிஸ்தானில் உள்ள பல நகரங்கள், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை வெள்ளத்துடன் போராடி வருகின்றன.

இச்சூழ்நிலைக்கு மோசமான அரசாங்கத் திட்டமிடலே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)