விளையாட்டு

ரக்பியில் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்கும் நியூசிலாந்து

31/07/2024 07:45 PM

பாரிஸ், 31 ஜூலை (பெர்னாமா) -- ரக்பி விளையாட்டில் நியூசிலாந்து மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணி 19-12 என்ற புள்ளிகளில் கனடாவை தோற்கடித்து தங்கத்தை வென்றது.

சுமார் 60,000 ரசிகர்கள் முன்னிலையில் இரு நாடுகளும் களமிறங்கின.

முதல் பாதி ஆட்டத்தில் 7-12 என்ற நிலையில் நியூசிலாந்து பின்தங்கி இருந்தாலும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் 19-12 நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

தோல்வி அடைந்தாலும், 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற கனடா இம்முறை வெள்ளி பதக்கம் வென்று தனது அடைவுநிலையை உயர்த்தியுள்ளது.

இதனிடையே, 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, அமெரிக்கா வெண்கலத்தை வென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)