பொது

கூடுதலாகப் பணியாற்றும் ஜேபிஜே அமலாக்க தரப்பினருக்கு அலவன்ஸ் தொகையாக 25 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

01/08/2024 05:44 PM

கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --  நாடு முழுவதிலும் உள்ள ஈராயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் போக்குவரத்து ஜேபிஜே  அமலாக்க அதிகாரிகளின், கூடுதல் வேலை நேர அலவன்ஸ் தொகைக்காக 25 லட்சம் ரிங்கிட் தொகையை போக்குவரத்து அமைச்சு ஒதுக்கியுள்ளது. 

மற்ற அரசாங்க நிறுவனங்களுடனான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் உட்பட வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு கூடுதலாக பணியாற்றும் அனைத்து அமலாக்கப் பணியாளர்களுக்கும் இச்சிறப்பு அலவன்ஸ் தொகை வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 

ஜேபிஜே அமலாக்க அதிகாரிகள் நலன் காக்கப்படுவதோடு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சுமூகமான முறையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த அலவன்ஸ் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)