உலகம்

ஹமாஸ் தலைவர் கொலை; இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும்

01/08/2024 07:18 PM

தெஹ்ரான், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று ஹமாஸ் தரப்பு கூறுகிறது.

மேலும், இஸ்மாயில் ஹனியே-இன் மரணத்தினால் தற்போதைய போர் இதர நாடுகளுக்கு விரிவடையும் அபாயம் உள்ளதாகவும் ஹமாஸ் எச்சரித்திருக்கிறது.

ஈரான், தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியேயின் நல்லுடல் தெஹ்ரான் பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டு, தொழுகை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கலந்து கொண்டார்.

அதன் பின்னர் இஸ்மாயில் ஹனியேயின் நல்லுடல் தெஹ்ரானில் உள்ள அசாடி சதுக்கத்திற்கு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டது.

ஈரானின் புதிய அதிபர் மசூத் பெஜேஷ்கியான்யின் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த இஸ்மாயில் ஹனியே வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)