உலகம்

ஹமாஸ் தலைவர் கொலை; அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை

01/08/2024 08:09 PM

சிங்கப்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு 2 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர்  சி.என் ஏ செய்திய்தியாளர்களிடம் பேசியபோது அதனைக் கூறினார்.

ஹனியே கொல்லப்பட்டதன் விளைவை ஊகிப்பது கடினம் என்று  ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். 

9 மாதங்களாக நீடிக்கும் போருக்குச் சண்டை நிறுத்தம் மிகவும் முக்கியம் என்று கூறிய அவர், எவ்வளவு காலம் பிடித்தாலும் அதற்கான முயற்சி தொடரும் என்றும் தெரிவித்தார். 

ஈரானின் புதிய அதிபரின்  பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த இஸ்மாயில் ஹனியே வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)