பொது

தேவைப்பட்டால் பெங் ஹோக் மரணம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் அழைக்கப்படலாம்

02/08/2024 05:48 PM

கோலாலம்பூர், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) --  தியோ பெங் ஹோக்கின் மரணம் தொடர்பில் அவர் தரப்பினர் வழக்கை மீண்டும் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினால், அது சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் அழைப்பதை அரச மலேசிய மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் மறுக்கவில்லை.

இறந்தவரின் குடும்பத்தினரை அழைத்து சாட்சியம் எடுப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக, அனைத்து அம்சங்கள் ரீதியில், இவ்வழக்கை தமது தரப்பு மதிப்பீடு செய்யும் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் சுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்.

பெங் ஹோக்கின் மரண விசாரணை குறித்து அவ்வழக்கு தொடர்பில் மீண்டும் விசாரணை ஆவணங்களை திறக்க வேண்டும் என்று போலீசுக்கு தாம் பரிந்துரைப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்திருந்தார்.

அவரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் அதேவேளையில், சுதந்திரமான மற்றும் நிபுணத்துவ முறையிலான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)