விளையாட்டு

ஒலிம்பிக்; அம்பெய்தும் போட்டியில் நூரூல் அஸ் ரீனா தோல்வி

02/08/2024 06:28 PM

பாரிஸ், 92 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று காலை நடைபெற்ற ஒலிம்பிக்கின் அம்பெய்தும் போட்டியில், நாட்டின் நூரூல் அஸ் ரீனா முஹமட் ஃபசில் துருக்கியிடம் 0-6 எனும் நிலையில் எலிஃப் பெர்ரா கோக்கிரிடம் தோல்வி கண்டார்.

20 வயதுடைய அவர், 27-29, 22-27 மற்றும் 25-27 என்ற நிலையில் வீழ்ந்தார்.

மற்றொரு நிலவரத்தில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்லும் இலக்கினை டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் நெருங்கியுள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில், அவர் 6-3, 7-6 என்ற நிலையில், ஸ்டெபனோஸ் சிட்சிபாசைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியைச் சந்திக்கின்றார்.

37 வயதுடைய அவர், முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் சிகிச்சை பெற்று கடும் சவாலுடன் இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)