பொது

புக்கிட் பிந்தாங்கில் அதிரடி சோதனை; 41 அந்நிய நாட்டினர் கைது

03/08/2024 05:12 PM

கோலாலம்பூர், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இன்று அதிகாலை ஜாலான் சங்காட், புக்கிட் பிந்தாங்கில் உள்ள மூன்று பொழுதுபோக்கு மையங்களிலும் ஶ்ரீ ஹர்தாமாசில் உள்ள ஒரு வளாகத்திலும் போலீஸ் நடத்திய சோதனை நடவடிக்கையில் நாற்பத்து ஒரு அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை மணி 1.30-க்கு தொடங்கிய இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் முப்பது ஒன்பது பேர் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்பு துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமாட் சுஹாலி முஹமாட் செயின் தெரிவித்தார்.

பாலியல் நடவடிக்கைக்கு ஆளானதாக நம்பப்படும் இருபத்து எட்டு வயது நைஜீரிய பெண்ணையும் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

ஆள்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு சட்டம், செக்‌ஷன் 12, உட்பட 1959 மற்றும் 1963ஆம் ஆண்டு செக்‌ஷன் 55D, செக்‌ஷன் 15 உட்பிரிவு (1) உட்பிரிவு (c) மற்றும் செக்‌ஷன் 6 உட்பிரிவு (1) உட்பிரிவு(c) கீழ் அவர்கள் அனைவரும் குற்றங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது

பாதிக்கப்பட்டவரும் கைது செய்யப்பட்டவர்களும் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் இதர கைதிகள் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)