பொது

தாய்லாந்து பிரதமருடன் அன்வார் அலுவல் பயணம்

03/08/2024 05:25 PM

நாரத்திவாட், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரீதா தவிசினும் இன்று, கிளாந்தான், ரந்தாவ் பஞ்சாங் மற்றும் தாய்லாந்து, நாரத்திவாட், சுங்கை கோலோக்கிற்கு, அலுவல் பயணம் மேற்கொண்டனர்.

நாரத்திவாட்டில் உள்ள சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் மையத்தில், ஸ்ரீதா தவிசின் அன்வாரை வரவேற்றார்.

ரந்தாவ் பஞ்சாங்-சுங்கை கோலோக்கை இணைக்கும் பாலத்தை மேம்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதே இப்பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டம், இரு நாடுகளின் எல்லை இணைப்பின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.

உள்துறை அமைச்சர்  டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் மற்றும் இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோரும் இப்பயணத்தில் பங்கேற்றனர்.

ரந்தாவ் பஞ்சாங்-சுங்கை கோலோக்கில் இரட்டைப் பாலம் எனப்படும் இரண்டாவது பாலம் கட்டுமானத் திட்டத்தை தாய்லாந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)