பொது

B உரிமத்திற்கு மாறும் திட்டம்; பல்வேறு விவகாரங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்

03/08/2024 05:34 PM

சிரம்பான், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  மலேசிய ஓட்டுநர் உரிமம் LMM, B1 மற்றும் B2 வைத்திருப்பவர்கள், B வகை முழு ஓட்டுநர் உரிமத்திற்கு மாறுவதற்கான சிறப்புத், பல்வேறு விவகாரங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.

B1 மற்றும் B2 மோட்டார் சைக்கிள்களுக்கான ஓட்டுநர் உரிமம் கொண்ட பத்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள், தங்கள் உரிமத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு இத்திட்டம் வாய்ப்பு வழங்கினாலும், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை நிச்சயம் பின்பற்றியிருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

"அபராத பதிவு இருக்க கூடாது, அவர்கள் மீது குற்ற தண்டனைப் பதிவு இருக்கக் கூடாது, சட்டம் 333-க்கு எதிரான பதிவுகள் இருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை நான் நேற்று கூறினேன்", என்றார் அவர்.

மேலும், அமைச்சு முறையான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பதாரர்களின் வயதைக் காட்டிலும் அனுபவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக லோக் விளக்கினார்.

"வயதை எடுத்துக் கொள்வோம். ஆனால், விண்ணப்பதாரருக்கு அனுபவம் மற்றும் B2 வகை ஓட்டுநர் உரிமம் இல்லை, அது ஏற்புடையதல்ல. எனவே, முறையான ஒரு முடிவை எடுக்க அவர்களின் ஓட்டுநர் உரிமத்திற்கான அனுபவ காலத்தைக் கருத்தில் கொள்ளவுள்ளோம்", என்று அவர் கூறினார்.

இன்று, சிரம்பான் துவான்கு ஐஸ்ஷா ரொஹானி அறிவியல் இடைநிலைப்பள்ளியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)