பொது

தென் தாய்லாந்தில் சமாதான உரையாடல் நடவடிக்கையை விரைவுபடுத்த மலேசியா விருப்பம்

03/08/2024 05:52 PM

பாசிர் மாஸ், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  தென் தாய்லாந்தில் சமாதான உரையாடல் நடவடிக்கையை விரைவுபடுத்த உதவ, மலேசிய அரசாங்கம் தயாராக இருக்கும் நிலைப்பாட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார்.

பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி போன்றவற்றில் தாய்லாந்துக்கு தேவையான அனைத்து அம்சங்களிலும், தேவையான அனைத்து ஈடுபாட்டையும் மலேசியா வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

"தாய்லாந்தின் தெற்கில் ஏற்பட்டுள்ள அமைதிப் பிரச்சனை, உள்நாட்டுப் பிரச்சனை என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அது மலேசியா தொடர்புடைய பிரச்சனையில்லை. இருப்பினும் தாய்லாந்துடன் நாங்கள் நல்லுறவில் இருப்பதால், அமைதிக்கான முயற்சிகளை திறம்பட ஆதரிக்க ஒத்துழைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்", என்றார் அவர்.

கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங் மற்றும் சுங்கை கோலோக்கிற்கு பணி நிமித்தமாக பயணம் மேற்கொண்டிருந்த அன்வார், இன்று பாசிர் மாசில் நில அலுவலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)