பொது

கொள்கை ரீதியில் உரிமத்தைப் பெற இணைய செய்தி & சமூக ஊடக சேவை வழங்குநர்கள் தயார்

03/08/2024 05:57 PM

பூச்சோங், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இணைய செய்தி மற்றும் சமூக ஊடக சேவை வழங்குநர்கள், கொள்கை ரீதியாக அதற்கான உரிமத்தைப் பெற தயாராக உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, சிங்கப்பூரில் சமூக ஊடக சேவை வழங்குநர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது, இவ்விவகாரம் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

"அவர்களுடனான கலந்துரையாடலின் போது, கொள்கை ரீதியாக சமூக ஊடக சேவைக்கான உரிமைத்தைப் பெற்ற ஒப்புக் கொண்டதாக கூறினர். அவர்களுக்கு மலேசிய மிக முக்கியமான வியாபார சந்தை என்று தெரிந்திருக்கின்றது. 30 முதல் 50ஜிபி டாத்தா பயன்பாடு என்பது மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்", என்றார் அவர்.

இன்று காலை, சிலாங்கூர் பூச்சோங்கில் நடைபெற்ற 3-வது K2K இளையோர் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் ஃபஹ்மி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)