உலகம்

வங்காளதேச கலவரத்தில் குறைந்தது 32 குழந்தைகள் பலி; யுனிசெஃப் கவலை

03/08/2024 06:21 PM

வங்காளதேசம், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் கடந்த மாதம், அரசாங்க வேலைகளில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால், குறைந்தது 32 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், இன்னும் பல காயமடைந்ததாகவும், ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

இது ஒரு பேரிழப்பு என்று கூறிய அவ்வமைப்பு அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஆண், பெண் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு அவ்வமைப்பு சார்பில், தெற்காசியாவிற்கான வட்டார அமைப்பின் இயக்குனர் சஞ்சய் விஜேசேகர காத்மாண்டுவில் இருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் தமது ஆழ்ந்த இரங்கலை கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து சஞ்சய் கவலை தெரிவித்தார்.

குழந்தைகள் எந்நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய சஞ்சய் அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502