பொது

நெங்கிரி: முறைகேடுகளை அணுக இரு நடவடிக்கை அறைகள்

03/08/2024 06:09 PM

குவா மூசாங், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இரு நடவடிக்கை அறைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் திறந்துள்ளது.

இதன்வழி, இடைத்தேர்தல் காலக்கட்டத்தில் ஊழல் உட்பட அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களைப் பொதுமக்கள் அளிக்க முடியும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எஸ்.பி.ஆர்.எம் கூறியது.

இன்று தொடங்கி ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரையில் 24 மணி நேரத்திற்குக் கோத்தா பாருவில் உள்ள கிளந்தான் மாநில எஸ்.பி.ஆர்.எம் கட்டிடத்தில் ஒரு நடவடிக்கை அறை திறக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், காலை மணி எட்டு தொடங்கி மாலை மணி ஆறு வரை குவா மூசாங் கிளை எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் மற்றொரு நடவடிக்கை அறை திறக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கையூட்டு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான புகார்களை prk2024_kel@sprm.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவோ அல்லது 09-7661800 என்ற எண்ணையோ தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அவ்வாணையம் கூறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)