பொது

ஜாலோர் கெமிலாங்கை பறக்க விடுவதில் மலேசியர்கள் பெருமைக் கொள்ள வேண்டும்

03/08/2024 06:15 PM

கூச்சிங், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --  குறிப்பிட்ட காலத்தைப் பொருட்படுத்தாமல் ஆண்டு முழுவதும் ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியைப் பறக்கவிடுவதில் மலேசியர்கள் பெருமைக் கொள்ள வேண்டும்.

அதை விடுத்து சில நேரங்களில் மட்டும் நாட்டுப் பற்று உணர்வு வெளிப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

“நாம் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக அமெரிக்காவுக்குச் சென்றால் அங்கு தேசிய தினத்தன்று மட்டுமின்றி எப்போதுமே அந்நாட்டுக் கொடியை ஒவ்வொரு வீடுகளிலும் பறக்கவிடுவர். அந்தப் பற்றுதலை மலேசியர்களாகிய நாமும் கொண்டிருக்க வேண்டும்“, என்றார் அவர்.

இன்று சரவாக் மாநில அளவில் நடைபெற்ற தேசிய மாதம் மற்றும் ஜாலோர் கெமிலாங் பறக்கவிடும் விழாவில் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

மேலும், கிராமங்கள், பூங்காக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிள் ஜாலோர் கெமிலாங்கைப் பறக்க விடுவதில் மடானி சமூகம் பிரதான பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)