பொது

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட வேண்டாமென அறிவுறுத்து

10/08/2024 07:08 PM

கோலாலம்பூர், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

2001-ஆம் ஆண்டு குழந்தை சட்டம் செக்‌ஷன் 15 உட்பிரிவு 2-க்கு ஏற்ப இச்செயல் முரணானது என்றும், அச்செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படலாம் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் நினைவுறுத்தினார்.

வாகனமோட்டும் உரிமம் இன்றி, வாகனத்தை ஓட்டியதாக, கடந்த திங்கட்கிழமை, சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 12 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட வழக்கை குறிப்பிட்டு அவர் தனது முகநூல் பதிவில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மாதம், இரண்டு சிறுவர்களுடன் பெரோடுவா விவா ரக வாகனத்தை ஓட்டிச் சென்ற 12 வயது சிறுவனின், 1 நிமிடம் 49 வினாடிக்கான காணொளி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதனிடையே, கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி, இரவு 7.30 மணிக்கு பூச்சோங், தாமான் புத்ரா இம்பியானாவில் பெரோடுவா விவா வாகனத்தை ஓட்டிச் சென்றதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அச்சிறுவன் மறுத்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)