பொது

சுங்கை பூலோ வட்டாரத்தில் 300 மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி

10/08/2024 07:50 PM

கோலாலம்பூர், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- PERBADANAN NASIONAL BERHAD, PERNAS-சும், FOCUS POINT VISION CARE GROUP எனும் தனியார் நிறுவனமும் இணைந்து சுங்கை பூலோ வட்டாரத்தில் உள்ள மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு இன்று மூக்கு கண்ணாடிகளை வழங்கின.

இதில் ரஹ்மான் புத்ரா இடைநிலைப்பள்ளி, புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி மற்றும் சுபாங் சீனப்பள்ளி ஆகியவை அடங்கும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமான PERNAS சமூகப் பொறுப்பு அடிப்படையின் ஒரு பகுதியாக FOCUS POINT உடன் இணைந்து மூன்று பள்ளிகளுக்கும் குறிப்பாக பி40 பிரிவு மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கியதோடு மற்றும் கண் பரிசோதனைககளையும் மேற்கொண்டதாக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

'' இரு தரப்பும் மக்களுக்கு இது போன்ற உதவிகளை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது சுங்கை பூலோ மக்கள் இது ஒரு நல்ல வாய்ப்பு,'' என்றார் அவர்.

மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 855 மாணவர்கள் கண் பரிசோதனை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ பகுதி மக்களுக்கு இலவச சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று ரமணன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502