விளையாட்டு

ஸ்கேட் ஆசியா பனிச்சறுக்கு போட்டி ; ஶ்ரீ அபிராமி இரண்டாம் நிலையில் வெற்றி

10/08/2024 08:03 PM

கோலாலம்பூர், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று தைவான் தலைநகரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டின் SKATE ASIA பனிச்சறுக்கு போட்டியில் நாட்டின் பனிச்சறுக்குத் தாரகை ஶ்ரீ அபிராமி சந்திரன் இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்.

14 வயதிற்குட்பட்ட FREESTYLE PLATINUM பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து அவர் நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்துள்ளதாக ஶ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்..

'' இந்தப் போட்டியில் 9 நாடுகளைச் சேர்ந்த 35 கிளப்கள் கலந்து கொண்டன. இம்மாதம் 2ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாளை 11ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறும்,'' என்றார் அவர்.

இவ்வாண்டு நடைபெற்ற நான்கு அனைத்துலக போட்டிகளில் சிறந்த அடைவுநிலையை ஆசியான் டிரோப்பி போட்டியிலும் கலந்து கொள்ளவிருப்பதாக சந்திரன் கூறினார்.

அப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் ஶ்ரீ அபிராமி பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502