அரசியல்

ஒற்றுமை உணர்வே நாட்டு மக்களின் பலம் - ஏரன் டாகாங் புகழாரம்

11/08/2024 05:56 PM

கோலாலம்பூர் , 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட மலேசிய விளையாட்டாளர்களுக்கு ஆதரவு வழங்குவதில் அரசியல், மதம் மற்றும் இன வேறுபாடு தடையாக அமையவில்லை.

மேலும், மலேசிய மக்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்ய விளையாட்டு துறை மிகப் பெரிய பங்கை வகித்துள்ளது.

தேசிய விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக சமூக ஊடகங்களின் வழியாக ஆதரவு வலுத்து வருவதை தம்மால் காண முடிவதாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரான டத்தோ ஏரன் ஆகோ டாகாங் தமது X  பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஒற்றுமை உணர்வே நாட்டு மக்களின் பலம் என்று நேற்று அவர் தமது X  பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதே உணர்வு தேசிய தின மாதம் மற்றும் மலேசிய தினக் கொண்டாத்திலும் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க உணர்வை பரப்ப சமூக ஊடக தளங்களை முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.

காரணம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்ப்பதில் சமூக ஊடகங்கள் சிறந்த தளமாக அமையும் என்பதை டத்தோ ஏரன் சுட்டிக்காட்டினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)