பொது

பணவீக்க விகிதம் & தேசிய பொருளாதார குறியீடு கட்டுப்பாட்டில் உள்ளது

12/08/2024 06:18 PM

கோலாலம்பூர், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) --  நாட்டின் தற்போதைய அடைவுநிலையின் அடிப்படையில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்கொள்ளும் மலேசியாவின் பொருளாதாரத் திறன் மீது முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு நம்பிக்கைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதைக் காட்டினாலும், பணவீக்க விகிதம் உட்பட தேசிய பொருளாதார குறியீடு இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதோடு, இரண்டாம் காலாண்டிற்கான நாட்டின் வளர்ச்சி கணிப்பும், 5.8 விழுக்காடு நல்ல ஆதரவை தருவதாக அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.

இருப்பினும், மீள் திறன் கொண்ட தொழில்களில் கவனம் செலுத்துவது உட்பட மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நாடும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெங்கு சஃப்ருல் நினைவுறுத்தினார்.

இன்று, கோலாலம்பூரில் பசுமை வர்த்தகம் குறித்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அது குறித்து கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)