5G-ADVANCED தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்த, MAXIS மற்றும் HUAWEI ஒத்துழைப்பு

13/08/2024 03:09 PM

கோலாலம்பூர், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 5G-Advanced தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்த, Maxis மற்றும் Huawei Technologies நிறுவனம் (Huawei Malaysia), 
கூட்டு புத்தாக்க மையத்தை அமைக்கும் நோக்கில் தங்களின் வியூக ஒத்துழைப்பை அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் புத்தாக்க தீர்வுகளை ஆராய்ந்து மேம்படுத்துதல், செயல்பாட்டு திறன் மற்றும் விரைவான பயன்பாடு ஆகியவற்றை
5G-Advanced தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கமாக கொண்டுள்ளதாக Maxis வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தொழில்துறை பயன்பாட்டு நிகழ்வுகளை மேம்படுத்துவதையும், தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் நடவடிக்கைகளுக்கான உள்நாட்டு திறமைகளை வளர்ப்பதையும் இந்த ஒத்துழைப்பு நோக்கமாக கொண்டுள்ளது.

''ஒட்டுமொத்தமாக, இந்த ஒத்துழைப்பு தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவித்து, தொலைத்தொடர்புகளின் அனைத்துலக சூழலில் மலேசியாவின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது,'' என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் வணிகமயமாக்கல் சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிக்கும் நோக்கில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு, மொஸ்தி-இன் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு மலேசிய வணிகமயமாக்கல் உச்சநிலை மாநாட்டின்போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் வழியாக அந்த ஒத்துழைப்பு கையெழுத்தானதாக Maxis தெரிவித்தது.

அந்த ஒத்துழைப்பின் வழியாக, அசையும் கட்டமைப்புகள் மற்றும் 5G தொழில்நுட்பம்/5G-Advanced தொழில்நுட்பங்களின் விரிவாக்கத்தை ஆதரிக்க கிகாபிட் திறனில் புதுமைகளை, Maxis மற்றும் Huawei ஆராயும்.

மொபைல் எட்ஜ் கம்ப்யூட்டிங், நெட்வொர்க் ஸ்லைசிங், எண்ட்-டு-எண்ட் நெட்வொர்க் ஆர்கெஸ்ட்ரேஷன், RedCap மற்றும் Passive-IoT ஆகியவையும் அதில் அடங்கும்.

கட்டமைப்பு செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்த இலக்கவியல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றின் பயன்பாட்டையும் Maxis மற்றும் Huawei ஆராயும்.

இதனிடையே, இந்நாட்டில் மட்டுமல்ல, வட்டார நாடுகளிலும் பொதுமக்களுக்கு 5G-மேம்பட்டதைக் காட்சிப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையையும் இந்நிறுவனம் பெற்றதாக Maxis தலைமை செயல்முறை அதிகாரி, கோ சியாவ் எங் தெரிவித்தார்.

''Huawei உடனான இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பு மலேசியாவின் இலக்கவியல் லட்சியங்களை ஆதரிப்பதற்கான எங்களின் நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த சமீபத்திய ஒத்துழைப்பின் மூலம், நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கான வணிகமயமாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளுடன் மனித மூலதனத்தை அதிகரிப்பதன் மூலம் 5G-Advanced-ஐ முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறோம்,'' என்றார் அவர்.

இந்த ஒத்துழைப்பு நாட்டின் இலக்கவியல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், ஆசியானின் தொழில்நுட்ப தலைநகராக மலேசியாவின் நிலையை வலுப்படுத்தவும் உதவும் என்று Huawei Malaysia நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, சைமன் சன் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)