நிறுவன இலக்கவியல் மாற்றத்தை விரைவுப்படுத்த, MAXIS, SINGTEL-உடன் ஒத்துழைப்பு

14/08/2024 09:19 PM

கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 5G கட்டமைப்பு, மேக, விளிம்பு கணிமை சேவை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புக்காக Singtel-லின் Paragon தள சேவை உள்ளிட்ட அனைத்தும் ஒன்றில் அடங்கிய முதலாவது தளத்தை, Singtel-உடன் இணைந்து Maxis அறிமுகப்படுத்தவிருக்கிறது.

5G-Advanced (5G-A) மற்றும் 5G தொழில்நுட்பம், மலேசிய வணிகங்கள் எளிதில் அணுகக்கூடிய விளிம்பு மற்றும் பல்வகையான மேகக் கணிமை மற்றும் உற்பத்தி, தளவாடங்கள், சுகாதாரம் மற்றும் பொது சேவை போன்ற பல்வேறு துறைகளுக்கு இடையிலான இலக்கிவியல் மாற்றத்தை அத்தளம் விரைவுப்படுத்தும் என்று
இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் Maxis தெரிவித்துள்ளது.

நாட்டின் வணிகமயமாக்கல் சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிக்கும் நோக்கில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு, மொஸ்தி-இன் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு மலேசிய வணிகமயமாக்கல் உச்சநிலை மாநாட்டின்போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் வழியாக அந்த ஒத்துழைப்பு கையெழுத்தானதாக Maxis தெரிவித்தது.

Maxis தலைமை செயல்முறை அதிகாரி, கோ சியாவ் எங் மற்றும் Singtel Digital InfraCo தலைமை தொழில்நுட்ப அதிகாரி, மனோஜ் பிரசன்னா குமார் ஆகிய இருவரும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Maxis-இன் நிறுவனப் பிரிவான Maxis Business மூலம் மலேசியாவில் உருவாக்கப்படும் இத்தளம், தேவையின் அடிப்படையில் விளிம்பு கணிமை சேவையை வழங்கும்.

பயனர்களுக்கு குறைந்த லேட்டன்சி கணிமை, GPUaaS மற்றும் சேமிப்பகத்திற்கான அணுகலையும் அது வழங்குகிறது.

பல்வகை விளிம்பு கணிமை அணுகல், MEC-இனால், இறுதி பயனர்கள் மற்றும் விளிம்பில் உள்ள சாதனங்களிலிருந்து தரவின் செயலாக்க திறன்களை அனுமதிக்க முடியும்.

நிகழ்நேர செயலாக்கம் மற்றும் அறிவார்ந்த முடிவெடுப்பதை செயல்படுத்த செயற்கை நுண்ணறிவு, AI-யை இணைப்பதன் மூலம் இது மேலும் மேம்படுத்தப்படுகிறது.

Maxis வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தக பங்காளிகளுக்கும் Paragon  சக்திவாய்ந்த சந்தையை உருவாக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கட்டமைப்பு மற்றும் மேக சூழல்களில் ஆர்கெஸ்ட்ரேஷனை எளிதாக்கும் ஒருங்கிணைந்த 5G தளத்தை வழங்குவதன் மூலம் இந்த ஒத்துழைப்பு வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்கிறது.

இவை அனைத்திற்கும், ஒரு பட்டனை கிளிக் செய்தால் மட்டும் போதும்.
 
இதனிடையே, Paragon தளம் வாயிலாக உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பல்வேறு வியூக கூட்டாண்மைகளை உருவாக்கி, இந்த உருமாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதில் Singtel முன்னணியில் உள்ளதாக
Singtel Digital InfraCo தலைமை நிர்வாக அதிகாரி, பில் சாங் கூறினார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5G பயன்பாட்டு நிகழ்வுகளை வழங்குவதற்கும் அளவிடுவதற்கும் உள்ள சிக்கல்களைக் குறைப்பதன் மூலம் 5G உள்கட்டமைப்பில் விரைவான பணமாக்குதலை Paragon செயல்படுத்துகிறது.

மலேசியாவில் 5G மற்றும் விளிம்பு பணமாக்குதலின் சேவை வாய்ப்புகளை பரஸ்பரமாக விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும், Maxis-உடன் இணைந்து செயலாற்றுவதில் தமது தரப்பு மகிழ்ச்சியடைவதாகவும் சாங் தெரிவித்தார்.

மலேசிய வணிகங்களுக்கான இணையப் பாதுகாப்பு மற்றும் தரவு இறையாண்மைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த தளம் மலேசியாவில் நிர்வகிக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)