உலகம்

சூடானில் நீடித்து வரும் நெருக்கடி; லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

13/08/2024 07:39 PM

சூடான், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சூடானில் நீடித்து வரும் நெருக்கடியினால் லட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதோடு, அந்நாட்டு மக்கள் பலர் மோசமடைந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையினால் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நெருக்கடி ஏற்பட்டது.

சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவப் படையினருக்கும் இடையில் நீடித்து வரும் பதற்றங்கள், நாடு முழுவதும் பரவுவதற்கு முன்பு அந்நாட்டின் தலைநகரான கார்டூமில் மிகப்பெரிய சண்டையாக உருவெடுத்தது.

இச்சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

மேலும், அதிகமானோர் பசி பட்டினிக்கு ஆளாகினர்.

இதனால், அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடி பேரழிவிற்கான உச்சக்கட்டத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த அமைப்பு, இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவிருக்கும் வேளையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)