பொது

விதிகளை மீறும் போலீஸ் உறுப்பினரிடம் பிடிஆர்எம் சமரசம் ஆகாது

14/08/2024 06:09 PM

கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) --  அரச மலேசிய போலீஸ் படை, (பி.டி.ஆர்.எம்) உறுப்பினர்கள், தவறான நடத்தை மற்றும் விதிகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டால், தலைமைத்துவம் ஒருபோதும் அவர்களிடம் சமரசம் கொள்ளாது.

பி.டி.ஆர்.எம் உறுப்பினர்களின் தவறான நடத்தை மற்றும் விதி மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, அக்கண்டிப்பைப் புலப்படுத்துவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன்  தெரிவித்தார்.

''கடந்த 2023-ஆம் ஆண்டு முழுவதும் திறக்கப்பட்ட 1,665 விசாரணை அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில், 2024 ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 1,760 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளனM,'' என்றார் அவர்.

இன்று பி.டி.ஆர்.எம்-இன் முகநூல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்பட்ட புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தர இணக்கத்துறை ஜே.ஐ.பி.எஸ் ஏற்பாடு செய்திருந்த தேசிய போலீஸ் படைத் தலைவரின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசும்போது, ரசாருடின் அவ்வாறு கூறினார்.

சங் சகா பீரூ சமூகத்தினரின், தவறான நடத்தை தொடர்பான பிரச்சனைகளைக் கையாளும், தீர்வு முறைகளை கண்டறியும்படி ஜே.ஐ.பி.எஸ்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502