பொது

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

14/08/2024 07:20 PM

பேங்காக், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) --  தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவரை அமைச்சாராக நியமித்ததன் காரணமாக ஸ்ரேத்தா தவிசினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஸ்ரேத்தா, கடந்த 16 ஆண்டுகளில் இதே நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நான்காவது பிரதமர் ஆவார்.

முன்னாள் குற்றவாளி ஒருவரை அமைச்சராக நியமித்ததால், அந்நாட்டின் சட்டத்தை அவர் மீறியதாக நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், தாய்லாந்தின் அரசியல் நிலவரம் மீண்டும் மாறக்கூடும் என்ற அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502