பொது

கே.டி.எம்.பி ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்ய குத்தகை வியூகம்

14/08/2024 07:34 PM

புத்ராஜெயா, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) --  KERETAPI TANAH MELAYU நிறுவனம், கே.டி.எம்.பியின் பயண ரயில் சேவைக்கான ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கு, குத்தகை முறை வியூகத்தை அரசாங்கம் அமல்படுத்தும்.

மலேசிய அரசாங்கம் மற்றும் சீன நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான இயக்கமுறை வழியாக அந்த புதிய வியூகம் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற பொருளாதார அமைச்சர், ரஃபிசி ரம்லி உடனான செய்தியாளர் சந்திப்பில் அந்தோணி லோக் அத்தகவலைக் கூறினார்.

பராமரிப்பு செலவுகள், குத்தகை காலக்கட்டத்தில், ரயில் பெட்டிகளை விநியோகித்த நிறுவனமே பழுது மற்றும் மாற்றியமைத்தல் செலவுகளை ஏற்றல் போன்ற அம்சங்களும் அந்த குத்தகையில் இடம்பெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502