பொது

டிஆர்டி சேவைக்காக கூடுதலாக 300 புதிய வேன்கள் - பிரசாரானா அதிகரிப்பு

14/08/2024 07:38 PM

பெட்டாலிங் ஜெயா, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வரும் டிசம்பர் மாதம் தொடங்கி டிஆர்டி எனப்படும் தேவையின் அடிப்படையிலான சேவைக்காக Prasarana Malaysia நிறுவனம் கூடுதலாக 300 புதிய வேன்களை அதிகரிக்கவிருக்கிறது.

கிள்ளான் பள்ளதாக்கு மற்றும் பினாங்கு சுற்று வட்டாரப் பகுதிகளின் பயன்பாட்டிற்காக இவ்வாண்டு டிசம்பர் தொடங்கி 2025-ஆம் ஆண்டு ஜூன் வரைக்குள், அந்த டிஆர்டி வேன்கள் கட்டம் கட்டமாக பெறப்படும் என்று PRASARANA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஹமட் அசாருடின் மாட் சா தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு மே மாதம் கிள்ளான் பள்ளத்தாக்கில் 18 வேன்களுடன் தொடங்கிய  டிஆர்டி சேவை ஏறக்குறைய ஒரு லட்சத்து 26 ஆயிரம் பயணிகளுக்கு பயனளித்துள்ளது.

இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள PRASARANA-இன் ரயில் சேவையை பயன்படுத்த விரும்பும் பயணிகள், 12 பேர் பயணிக்கும் DRT வேனை குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த வேன்களில் கண்காணிப்பு காமிரா உட்பட பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள் உள்ளன. 

இவை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

"நாங்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இது புதிய ஆண்டிற்கானது. நாங்கள் கருத்துக்களைப் பெறுகிறோம். மேலும் மேம்படுத்துகிறோம், கூடுதலாக, 300 வேன்கள் வழங்கப்படுவது இது சரியான நேரமாக இருக்கும்,'' என்றார் அவர்.

இன்று, பெட்டாலிங் ஜெயா, தாமான் பாஹாகியா எல்ஆர்டி நிலையத்தை பார்வையிட்ட போது, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)