பொது

முழு B உரிமம் வழங்குவதற்கான சிறப்பு திட்டம் ஒருங்கிணைப்பில் உள்ளது

14/08/2024 07:45 PM

கோலாலம்பூர், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசிய ஓட்டுநர் உரிமம், LMM-இன் வகுப்பு B1 மற்றும் B2 வைத்திருப்பவர்களுக்கு, முழு B உரிமம் வழங்குவதற்கான சிறப்பு மாற்றம் குறித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பு தற்போது விரிவான செயல்பாட்டில் உள்ளது.

அக்டோபர் முதலாம் தேதி அமலுக்கு வரவிருக்கும் இத்திட்டம் குறித்து தமது தரப்பு கூடிய விரைவில் அறிவிக்கும் என்று, சாலைப் போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே-வின் தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள், 500cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிளை ஓட்டி இரண்டு மணிநேரம் நடைமுறை சோதனைக்கு உட்பட வேண்டும். 

இதன்வழி, ஜே.பி.ஜே-வின் தகுதி பெற்ற சோதனை அதிகாரியின் அங்கீகாரத்தை அவர்கள் பெற முடியும் என்று ஏடி ஃபட்லி ரம்லி கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)