பொது

சமூக வலைத்தள உள்ளடக்கத்தில் 'AI' அடையாளமிட வேண்டும்

15/08/2024 05:19 PM

கோலாலம்பூர், 15 ஆகஸ்ட் (பெர்னாமா) --  சமூக வலைத்தளங்களில் எதிர்பாரா அசம்பாவிதங்களைத் தவிர்க்க அதில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு, AI உள்ளடக்கத்திலும் 'AI' என்ற அறிவிக்கையுடன் ஓர் அடையாளமிட வேண்டும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தங்கள் தளங்களில் பதிவேற்றப்படும் ஒவ்வோர் உள்ளடக்கத்திற்கும் சமூகவலைத்தள பொறுப்பாளர்கள் கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளத்தில் பிரபலமான கைரூல் அமிங், DEEP FAKE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான காணொளியால் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்துரைக்கையில் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

இத்தகையச் சம்பவங்கள் தொடர்ந்து மீண்டும் நிகழாமல் தடுக்க தனது அமைச்சு விரும்புவதாகக் கூறிய ஃபஹ்மி, இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது சில சமூக ஊடக நிர்வகிப்பாளர்கள் பொறுப்பேற்க மறுப்பதைச் சுட்டிக் காட்டினார்.

இதனால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சமூகவலைத்தளத்தைப் பயன்படுத்தி அதைப் பயன்படுத்துபவர்களை ஏமாற்றுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)