பொது

டிசம்பர் தொடங்கி எஸ்.எஸ்.எம் ஊதிய திட்டம் எஸ்.எஸ்.பி.ஏ முறைக்கு மாற்றம் காண ஒப்புதல்

16/08/2024 11:16 AM

புத்ராஜெயா, 15 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி, SSM எனப்படும் மலேசிய ஊதிய திட்டத்தை பொது சேவை ஊதிய முறை, SSPA-வுக்கு மாற்ற அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

பொது சேவை ஊழியர்கள் மீதான அரசாங்கத்தின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"உங்களின் முன்னேற்றம் குறித்து நான் வலியுறுத்தினாலும், பொது சேவை ஊழியர்களின் தியாகம் அசாதாரணமானது, இதற்கு முன்பு எதிர்கொண்ட சவால்கள் மட்டுமின்றி, கோவிட்-19 பெருந்தோற்றை கையாள்வது, அன்றைய காலக்கட்டத்தில் முன்னிலையில் இருந்து சேவையாற்றியவர்கள் பொது சேவை ஊழியர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனாலேயே மலேசிய ஊதிய திட்டத்தை பொது சேவை ஊதிய முறை மாற்ற அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது'', என்று அவர் கூறினார்.

இன்று, 19-வது MAPPA எனப்படும் பொது சேவை பொறுப்பாணை நிகழ்ச்சியின்போது பிரதமர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, பொதுச் சேவையின் உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறனை அதிகரிப்பது உட்பட, சீர்திருத்தத்தின் மூன்று முக்கிய கூறுகளின் அடிப்படையில் பொது சேவை ஊதிய முறை செயல்படுத்தப்படும் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)