பொது

SSPA அமலாக்கம்; நாட்டின் பொது சேவைத் தரத்தை மேம்படுத்தும்

16/08/2024 06:48 PM

புத்ராஜெயா, 16 ஆகஸ்ட் (பெர்னாமா) --  பொது சேவை ஊதிய முறை, SSPA அமலாக்கம் நாட்டின் பொது சேவையின் தரத்தை மேம்படுத்தும்.

மக்களுக்கான ஒவ்வொரு சேவையும் சிறந்த தரம் மற்றும் நேர்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக பொது சேவை ஊதிய முறை பொதுச் சேவை சீர்திருத்தத்தைக் கோடிட்டுக் காட்டுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார்.

''இதற்குப் பிறகு வழங்கப்படும் சேவையின் தரத்தின் அடிப்படையில் ஊதியம் மற்றும் பதவி உயர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம், பொது சேவை ஊழியர்களின் சிறந்த சாதனைகளை மக்களிடமும் நாம் நிச்சயமாகக் காண்போம்'', என்று அவர் கூறினார்.

இன்று, வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் 19-வது MAPPA எனப்படும் பொது சேவை பொறுப்பாணை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபஹ்மி பட்சில் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இன்று அறிவித்திருக்கும் பொது சேவை ஊழியர்களின் ஊதிய உயர்வு, நாட்டிலுள்ள அனைத்து பொது சேவை கேந்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மரியாதையும் அங்கீகாரமும் ஆகும்.

ஆனால், இம்மரியாதையும் அங்கீகாரமும், பொது சேவை ஊழியர்கள் சமூகத்திற்கு வழங்கும் சேவைக்கு ஏற்ப அமைய வேண்டும் என்று அரசாங்க தலைமைச் செயலாளர், டத்தோ ஶ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாகார் நினைவுறுத்தினார்.

இதனிடையே, பொது சேவை ஊழியர் ஊதிய சீரமைப்பு சேவையை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கான தொடக்க புள்ளியாக இருக்க வேண்டும் என்று பொது சேவை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ வான் அஹ்மட் டாஹ்லான் அப்துல் அசிஸ் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)