விளையாட்டு

தற்காப்பு கலையைக் கற்க வித்திட்டது பகடிவதை; தற்போது சுக்மாவில் தங்கம்

20/08/2024 07:38 PM

கூச்சிங், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) --   பள்ளியில் பகடிவதையினால் பாதிக்கப்பட்டு கசப்பான அனுபவத்தை கொண்டிருந்த பி. மோகன ராஜன், TAEKWONDO தற்காப்பு கலையை பயில ஆரம்பித்தார்.

தற்காப்புக்காக கற்றுக் கொண்ட இக்கலை தற்போது தங்கம் வெல்லும் அளவிற்கு அவரை இட்டுச் சென்றுள்ளது.

இன்று, சுக்மா போட்டியில் இடம்பெற்ற 54 கிலோ கிராம் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நெகிரி செம்பிலானை சேர்ந்த அஹ்மாட் முஹைமீன் எம் அல் அஃபிட்சை 2-1 என்ற நிலையில் தோற்கடித்து, 20 வயதான பி. மோகன ராஜன் தங்கம் வென்றார்.

67 வயதான தமது தந்தை பெருமாள், TAEKWONDO கற்றுக் கொள்ள தம்மை ஊக்குவித்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், தமக்கு முதுகெலும்பாக இருந்த தமது தந்தை கடந்த பிப்ரவரி மாதம் காலமானதால், இந்த வெற்றியை அவருடன் பகிர்ந்து கொள்ள இயலவில்லை என்று மோகன ராஜன் கவலை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)