பொது

அமைச்சரவை உறுப்பினர்களின் அடைவுநிலையில் பிரதமர் திருப்தி

21/12/2024 06:24 PM

சுபாங் ஜெயா, 21 டிசம்பர் (பெர்னாமா) -- மடானி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் தலைமைத்துவத்தில், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களின் அடைவுநிலையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திருப்தியடைந்துள்ளார்.

எனினும், மக்களுக்கான திட்டங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

அக்காலக்கட்டத்தில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய அமைச்சர்களும், மிதமான அளவில் செயல்பட்ட அமைச்சர்களும் இருந்ததாக பிரதமர் தெரிவித்தார்.

''சரிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளது. நாங்கள் மேம்படுத்திக் கொள்வோம். சிறு அனுபவங்கள் உள்ளது. ஆனால், ஒரு விஷயத்தில் நான் திருப்தியடைந்துள்ளேன். ஊழல் பிரச்சனைகள் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளில் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் பழைய செயல் மற்றும் ஆதாயத்தைத் திருடுவதை நான் அனுமதிக்கவில்லை. அதனை நான் நிறுத்திவிட்டேன். அது எளிதானது அல்ல,'' என்றார் அவர்.

தமது தலைமைத்துவத்திலான நிர்வாக முறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சருமான அன்வார் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)