பொது

உதவிகள் வழங்கப்படுவது & வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் இனவாத அம்சங்கள் நிறுத்தப்பட வேண்டும்

21/12/2024 06:13 PM

சுபாங் ஜெயா, 21 டிசம்பர் (பெர்னாமா) -- நாட்டில் உதவிகள் வழங்கப்படுவது மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் இனவாத அம்சங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் கொள்கைகள் தெளிவாக இருப்பதால் வறுமையைக் கையாள்வதற்கான முயற்சிகளில் எந்தவொரு இன பாகுபாடும் இல்லாமல் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார்.

''இன விவரக்குறிப்பை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். முன்பிலிருந்தே எனது கொள்கையை கவனித்தால், ABIM இருக்கும்போதும் நான் இன விவரக்குறிப்பை வலியுறுத்தும் அம்சத்தில் நான் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு உடன்படவில்லை,'' என்றார் அவர். 

இந்திய மக்களுக்காக ஒதுக்கிடப்பட்ட 13 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி போதுமானது அல்ல என்று சில தரப்பினர் கூறி வருவது குறித்து கருத்துரைக்கையில் நிதி அமைச்சருமான அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

13 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, தெக்கூன் மற்றும் 'Amanah Ikhtiar Malaysia'-இன் கீழ் உள்ள சில திட்டங்களை உள்ளடக்கி, இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்ட உதவியின் ஒரு பகுதி மட்டுமே என்று அவர் விளக்கினார்.

மேலும், அண்மையில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ், இந்தியர்களுக்கான திட்டங்களை அதிகரிக்க அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)