பொது

மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கிக்கொண்ட மலேசியர்கள் மீட்கப்படுவர் 

21/12/2024 06:19 PM

செனாவாங், 21 டிசம்பர் (பெர்னாமா) -  மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கிக்கொண்ட மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை  அரசாங்கம் எப்போதும் மேற்கொண்டு வருகிறது. 

மியன்மாரில் உள்ள சில தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் திறன் கொண்டவரான வெளியுறவு அமைச்சின் முன்னாள் செயலாளர் டான் ஶ்ரீ ஒத்மான் ஹஷிமை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலின் பேரில் மியன்மாருக்கான மலேசிய சிறப்பு தூதராக தமது தரப்பு நியமித்ததை வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் குறிப்பிட்டார். 

வேலை மோசடிகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துவதுடன் சொந்த மக்களுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அச்சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்றுமுஹமட் ஹசான் தெரிவித்தார்.  

"மியன்மாரில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. முன்பு நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், தற்போது மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் பல கிளர்ச்சிப்படைகள் உள்ளன. அவர்களிடம் அதிகமான ஆயுத பலங்களும் உள்ளன,'' என்றார் அவர்.

இன்று நெகிரி செம்பிலான், செனாவாங்கில தோக் மாட் மின்னியல் விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

இதனிடையே, மியன்மாரில் சிக்கல் நிறைந்த பகுதிகள் பல உள்ளதாகவும் ஒவ்வொன்றும் அதன் சொந்த வலுவுடன் செயல்பட்டு வருவதால் அந்நாட்டின் அரசாங்கமே அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக முஹமட் ஹசான் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)