பொது

புதுடெல்லியின் மூன்று முக்கிய இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் சந்திப்பு

21/08/2024 06:28 PM

இந்தியா, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- புதுடெல்லியில் உள்ள மூன்று முக்கிய இந்திய நிறுவனங்களான, 'Tata Consultancy Services' டிசிஎஸ், 'எமாமி அக்ரோடெக்' மற்றும் 'எச்சிஎல் டெக்' ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்திப்பு நடத்தினார்.

தகவல் தொழில்நுட்ப சேவை, ஆலோசனை மற்றும் வணிக தீர்வுகள் வழங்கும் நிறுவனமான டிசிஎஸ்-ஐ பிரதிநிதித்து இந்திய வணிகம், வியூக கணக்குகள் மற்றும் சந்தை வளர்ச்சி ஆகிவற்றின் தலைவரான உஜ்வல் மாத்தூரை பிரதமர் சந்தித்தார்.

இந்தியாவின் சமையல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் 'எமாமி அக்ரோடெக்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Manush Goenka, மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்கும் 'எச்சிஎல் டெக்னோலோஜிஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி. விஜயகுமாரையும் பிரதமர் சந்தித்தார்.

இச்சந்திப்புக் கூட்டத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சில் சீ கியோங் ஆகியோருடன் இந்தியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ முசாஃபார் ஷா முஸ்தாபாவும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்புகளைத் தொடர்ந்து, நிதியமைச்சரான அன்வார், இந்திய தொழில்துறை தலைவர்களுடனான வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்திக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)