BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
டியோஃபிலோ, 22 டிசம்பர் (பெர்னாமா) -- சனிக்கிழமை அதிகாலையில் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று, கனரக வாகத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, தீயணைப்புத் துறை தெரிவித்தது.
டியோஃபிலோ ஓட்டோனி நகருக்கு அருகில் உள்ள முதன்மை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் பேருந்திலிருந்து வெளியேற்றியப் பின்னரே, அதன் ஓட்டுநர் உட்பட 38 பேர் உயிரிழந்ததை மாநில தீயணைப்புத் துறை உறுதிசெய்தது.
சம்பவத்தின் அப்பேருந்தினுல் 45 பேர் இருந்தனர்.
சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற பயணிகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கனரக ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியதாகத் தெரிவித்த தீயணைப்புத் துறை, இதே சம்பவத்தில் சம்பந்தப்பட்ட லாரியை மோதிய மற்றொரு காரில் இருந்த மூவரும் உயிர்த்தப்பியதாகக் குறிப்பிட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல் பிரிவின் விசாரணை தேவைப்படுவதாக தீயணைப்புத் துறை மேலும் கூறியது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை மணி 4 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தை மோதியது தெரிய வந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)